“கல்வி ஊக்கத்தொகையாக 2.5 கோடி ருபாய் வழங்க முடிவு!”- நடிகர் சூர்யா

Default Image

கொரோனா முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க, தமிழக அரசி, கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை செப். 30 வரை நீட்டித்து உத்தரவிட்டது. இந்தநிலையில் நடிகர் சூர்யா, சூரரைப்போற்று வெளியீட்டு தொகையில் வரும் பணத்தில் ஐந்து கோடி ரூபாயை பொது மக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் கொரோனா யுத்த களத்தில் முன் நின்று பணியாற்றியவர்களுக்கு வழங்கவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

அந்தவகையில், கொரோனா முன் களப்பணியாளர்கள் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி ‘கொரோனா களப்பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாய் கல்வி ஊக்கத் தொகையாக வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

ஒதுக்கப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 2.5 கோடி ரூபாய் அவரின் திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டதாகவும், அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளர்கள், இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கொரோனா முன்களப்பணியாளர்கள் குடும்பத்தில் கல்வி பயில்பவர்களுக்கு ரூ.2.5 கோடி கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்துள்ளதாகவும், பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/மாணவிக்கு மட்டும், கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்த அவர், அதற்கான விண்ணப்ப படிவங்களை www.agaram.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்