தென்னிந்தியாவில் உள்ள இந்திய விமான நிலைய ஆணையத்தில் (ஏஏஐ) சேர்ந்த முதல் பெண் தீயணைப்பு வீரர் என்ற பெருமையை ரம்யா ஸ்ரீகாந்தன் பெற்றுள்ளார். இரண்டு வயதுடைய குழந்தையின் தாயான ரம்யா நவம்பர் 1-ம் தேதி சென்னை விமான நிலையத்தின் தீயணைப்பு சேவைத் துறையில் ஜூனியர் உதவியாளராக சேர்ந்தார்.
2 வயது குழந்தையின் தாய் ஆன ரம்யா பெரும்பாலும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு துறையில் தனித்துவமாக நிற்கிறார். அவர் இப்போது சென்னை விமான நிலையத்தில் ஜூனியர் உதவியாளராக (ஏ எஃப் எஸ்) உள்ளார்.மேலும் இவர் தென்னிந்திய விமான நிலையங்களில் முதல் பெண் தீயணைப்பு வீரராகவும் உள்ளார். இந்தியாவில் மூன்றாவது பெண் தீயணைப்பு வீரர் என்ற பெருமையை பெற்றார்.
கட்டமைப்பு பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ரம்யா, திருவனந்தபுரத்தில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி இன்ஸ்டிடியூட் ஆப் வுமன் ஃபார் டெக்னாலஜி பேராசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். 2017-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காக ஓய்வு நாட்களில் வீட்டில் இருந்தார்.
குழந்தையை வளர்ப்பு ஓய்வு நாளின் போது தீயணைப்பு வீரர்களை தேர்ந்தெடுக்கும் விளம்பத்தை ரம்யா பார்த்து உள்ளார்.அதனால் தீயணைப்பு வீரர் வேலைக்கு விண்ணப்பித்தார்.
ரம்யா 2018-ம் ஆண்டு எழுத்துத் தேர்வை முடித்துவிட்டார். பின்னர் 2019 மார்ச் மாதம் உடல் பரிசோதனையிலும் தேர்ச்சி பெற உடல் பயிற்சி செல்ல முடிவு செய்தார்.ரம்யா நுட்பங்களைக் கற்றுக்கொள்ள சுமார் நான்கு மாதங்கள் கடுமையான பயிற்சி பெற்றார். பயிற்சி மையம் அவரது வீட்டிற்கு அருகில் இருந்ததால் குழந்தையை வளர்ப்பதில் அவருக்கு அதிக சிக்கல் இல்லை ஏற்படவில்லை.
இந்நிலையில் டெல்லியில் பயிற்சியின்போது ரம்யா தனது குழந்தையை பிரிந்து இருக்க வேண்டியிருந்தது. ரம்யாவிற்கு தங்குமிடம் வழங்கப்பட்டாலும், வானிலை குழந்தைக்கு பொருந்தவில்லை அப்போது என் குழந்தையை பிரிந்து இருத்தேன் என கூறினர்.
இது பற்றி ரம்யா கூறுகையில் ,சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு பெரிய பொறுப்பு மற்றும் ஒரு சவாலான வேலை. இது பல பெண்கள் இல்லாத ஒரு துறையாகும். ஆனால் நான் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறேன் என கூறினார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…