2 மாதங்களில் திருத்தணி முருகன் கோவிலில் ரூ.1 கோடியே 2 லட்சம் காணிக்கை!
கடந்த இரண்டு மாதங்களில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியன் சுவாமி கோவில் உண்டியலில் 1 கோடியே 2 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
விடுமுறை காலமான ஏப்ரல் மாதம் இறுதி தொடங்கி தற்போது வரை உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை அறநிலையத்துறையினரால் கணக்கிடப்பட்டது.
அதில், 1 கோடியே 2 லட்சத்து 26 ஆயிரத்து 825 ரூபாய் ரொக்கமும், 882 கிராம் எடையுள்ள தங்கமும், 5 ஆயிரத்து 75 கிராம் எடையுள்ள வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.