சென்னையைச் சேர்ந்த காந்தி குழுமம் டெல்லி, மும்பை, கொல்கத்தா, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகளை வாங்கி ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்து வருகின்றது. பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள காந்தி குழுமத்தின் ஆயத்த ஆடைக் கிடங்கு, வேப்பேரியில் உள்ள நிறுவன பங்குதாரர்களில் ஒருவரான மருத்துவர் பிரகாஷ் சந்த் ஜெயின் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று நுங்கம்பாக்கத்தில் உள்ள மேத்தா ஜுவல்லரி மற்றும் தியாகராய நகரில் உள்ள சில துணி மற்றும் நகைக்கடைகளுக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. இந்த சோதனைகளில் இதுவரை கணக்கில் வராத 7 கோடி ரூபாய் பணம் மற்றும் 15 கிலோ தங்கம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.