2ம் வகுப்பு சிறுவன் முகமது யாசினின் நேர்மை குணம்!சாலையில்கிடந்த 50,000 ரூபாயை போலீசிடம் ஒப்படைத்தார்!
ஈரோட்டில் 2ம் வகுப்பு மாணவன் சாலையில்கிடந்த 50,000 ரூபாயை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
பாட்சா என்பவர் ஈரோட்டில் உள்ள கனிராவுத்தற்குளத்தை சேர்ந்தவர் ஆவார்.இவருக்கு முகமது யாசின் என்ற மகன் உள்ளார் .இவர் சோமூர் என்ற இடத்தில் அரசு பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகின்றார்.
இவர் பள்ளிக்கு செல்லும் வழியில் சாலையில் கிடந்த 50,000 ரூபாயை முகமது யாசின் பார்த்துள்ளார்.பின்னர் அவர் அந்த பணத்தை பள்ளிக்கு எடுத்து சென்று ஆசிரியர்களிடம் எடுத்து கொடுத்துள்ளார்.இதன்பின் மாவட்ட காவல்துறை அதிகாரி சக்தி கணேஷிடம் ஆசிரியர்களின் உதவியால் முகமது யாசின் பணத்தை ஒப்படைத்தார்.இதை பார்த்து காவல்துறையினர் முகமது யாசினுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.