நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் 1,990 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது- முதல்வர் பழனிச்சாமி பெருமிதம்.!
நான் முதல்வராக பொறுப்பேற்ற பின் 1,990 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி கலந்தாய்வில் கலந்து கொண்டு கூறியுள்ளார்.
மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்று வருகிறது. மேலும் இந்தாண்டு மருத்துவ படிப்புக்கான இடங்களில் 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
இன்று தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கலந்தாய்வின் முதல்கட்டத்தில் சிறப்பு பிரிவு மாணவர்களும், இரண்டாம் கட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களும், மூன்றாவது கட்டத்தில் பொதுப் பிரிவினரும் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் பழனிச்சாமி , கலந்தாய்வில் கலந்து கொண்ட 18 மாணவர்களுக்கான மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணையை வழங்கியதுடன், மாணவர்களுக்கு ஸ்டெதஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களையும் வழங்கினார் .
அதனை பெற்று கொண்ட மாணவர்கள் முதல்வரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர் . அதனையடுத்து பேசிய முதல்வர்,இந்த நாள் தனக்கு மகிழ்ச்சியான நாள் என்றும் , ஏனெனில் இந்த நாள் அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நினவாக்கிய நன்னாள் . அரசு பள்ளியில் படித்த ஒரு மாணவனாக இந்த நாள் தனக்கு மனநிறைவை ஏற்படுத்தியதாகவும் கூறினார் . 7.5% உள் இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் 313 பேர் எம்பிபிஎஸ் மற்றும் 92 பேர் பிடிஎப் படிப்பையும் படிக்க உள்ளனர் . மேலும் பிரதமரிடம் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வருவதாகவும் , நீட் தேர்வு முறையை தமிழக அரசு தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும்,அதற்காக சட்ட போராட்டங்களை நடத்தி வருவதாகவும் கூறினார் .
மேலும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டின் மூலம் வாய்ப்பு வழங்கப்பட்டதால் , பல ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறி உள்ளதாகவும் கூறிய அவர், தமிழகத்தில் 1,990 மருத்துவ இடங்கள் கூடுதலாக தான் முதல்வராக பொறுப்பேற்ற பின் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அடுத்த கல்வியாண்டான 2021-2022-ல் 1990 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.