தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,916 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,916 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,86,885 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 219 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 34 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,496 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,866 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,31,962 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,60,306 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,96,45,946 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 20,427 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்தியாவுக்கு…
சென்னை : மதுரவாயல் பகுதியில் தான் தங்கியிருக்கும் வாடகை வீட்டில் இருந்த பணம், ஆவணங்கள், கலைமாமணி விருதுகள் என பல…
சென்னை : குடியரசு தினத்தை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த…
சென்னை : இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : இந்தியா - இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் சென்னை…
மும்பை : இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் அடுத்த படமான 'எஸ்.எஸ்.எம்.பி29' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில், மகேஷ் பாபுவுடன்…