19.46 கோடி கடல் அரிப்பு தடுப்பு பணி மற்றும் இறங்குதளம் அமைக்க ஒதுக்கீடு!
19.46 கோடி கடல் அரிப்பு தடுப்பு பணி மற்றும் இறங்குதளம் அமைக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தலைமையில், மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை மாவட்டம் சின்ன மேடு மற்றும் கூழையாறு கிராமங்களில் 19.46 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு பணிகள் மற்றும் மீன் இறங்கு தளம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் மீன்வலை பின்னும் கூடம், ஏலக்கூடம் ஆகியவை கட்டப்பட்டு கொண்டிருப்பதால் கிராம மீனவர்கள் பயனடைவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.