தமிழகம் முழுவதும் இன்று 18-வது தடுப்பூசி முகாம்..!
நாளை தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவிருந்த 18வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாளை நடைபெறவிருந்த 18வது மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இந்த தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறவுள்ள நிலையில்,சென்னையில் 2உள்ள 00 வார்டுகளில் 1,600 முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.