#Breaking: தமிழகத்தில் புதிதாக 1,893 பேருக்கு கொரோனா பாதிப்பு..!-27 பேர் உயிரிழப்பு..!

Default Image

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,893 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,893 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,79,130 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 209 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 27 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,367 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,930 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,24,400 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,50,868 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,90,02,757 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 20,363 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident
garam masala (1)
[File Image]
Robin uththappa
smriti mandhana SCORE