tn police transferred [file image]
தமிழ்நாட்டில் தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள் உட்பட 1,847 பேரை இடமாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறுவதையொட்டி, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதில், குறிப்பாக ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வரும், அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரை இடமாற்றம் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டதாக தகவல் வெளியானது. அதன்படி, தேர்தல் நடத்தை விதிகளின் படி தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவலர்களை இடமாற்றம் செய்ய டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை..!
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 1847 காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர்கள், முதல்நிலை காவலர்கள், இரண்டாம் நிலை காவலர்கள், பெண் காவலர்கள் என மொத்தம் 1847 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னை காவல்துறையில் மட்டும் 340 காவலர்கள், பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிடம் மாற்றம் தொடர்பான பட்டியலை வரும் 10ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி தலைமை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…