தமிழகத்தில் 24-ம் தேதி முதல் இன்று வரை 1,80,916 மெட்ரிக் டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை ..!
- தமிழகத்தில் கடந்த 24-ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 978 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
- இந்த வாகனங்கள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் காய்கறிகளை விற்பனை
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் தமிழக அரசு தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் காய்கறி மற்றும் பழ கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசு நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறி, பழங்ககளை விற்பனை செய்வதாக அறிவித்தது. அதன்படி கடந்த 24-ம் தேதி முதல் இன்று வரை மொத்தம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 978 வாகனங்கள் மூலம் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 916 மெட்ரிக் டன் காய்கறிகளை விற்பனை செய்துள்ளதாக தோட்டக்கலை துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற 14-ம் தேதி வரை மீண்டும் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் காய்கறி கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.