தூத்துகுடியில் பறிமுதல் செய்யப்பட்ட 180 வாகனங்கள் திரும்ப ஒப்படைப்பு!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரக்கூடாது என அரசு மற்றும் காவல்துறை சார்பில் அறிவித்துள்ள நிலையில் பலர் இந்த உத்தரவை அலட்சியமாக எடுத்துக்கொண்டு வெளியே வருகின்றனர்.
அப்படி தேவைல்லாமல் வெளியே வருபவர்களிடம் இருந்து போலீசார் வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் இதுவரை 2115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு , 2486 பேர் கைது செய்யப்பட்டன.
இந்நிலையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திரும்ப உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என டி.ஜி.பி திரிபாதி அறிவித்தார்.
இதனையடுத்து நேற்று மாலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 180 வாகனங்கள் திருமப ஒப்படைக்கப் பட்டுள்ளன. தொடர்ந்து எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட வரிசையின் படி வாகன உரிமையாளர்களுக்கு எந்த இடத்தல் திரும்ப பெற வேண்டும் தகவலை முதலில் அனுப்பப்படும் என்று காவல் துறை அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025