தீர்ப்பால் யாரும் கண்கலங்கவில்லை ….!18 பேரும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்…!தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏ செந்தில் பாலாஜி அதிரடி

Published by
Venu

18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கவில்லை என்று தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.

அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
இந்நிலையில் இது தொடர்பாக தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கவில்லை. தீர்ப்பால் யாரும் கண்கலங்கவில்லை .18 பேரும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் .தேர்தலை கண்டு அஞ்சவில்லை.டிடிவி தினகரனுடன் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 18 பேரும் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்க உள்ளோம். எங்கள் நிலைப்பாட்டை தினகரனிடம் சொல்வோம் என்றும் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago