தீர்ப்பால் யாரும் கண்கலங்கவில்லை ….!18 பேரும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்…!தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏ செந்தில் பாலாஜி அதிரடி
18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கவில்லை என்று தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
இந்நிலையில் இது தொடர்பாக தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பு வருத்தமளிக்கவில்லை. தீர்ப்பால் யாரும் கண்கலங்கவில்லை .18 பேரும் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் .தேர்தலை கண்டு அஞ்சவில்லை.டிடிவி தினகரனுடன் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் 18 பேரும் ஆலோசித்து அடுத்த கட்ட முடிவு எடுக்க உள்ளோம். எங்கள் நிலைப்பாட்டை தினகரனிடம் சொல்வோம் என்றும் தகுதிநீக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவரான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.