’20 நாட்களில் 18 கொலைகள்’ – தலைநகர் கொலைநகரமாக மாறி வருகிறது – ஈபிஎஸ்
தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது என ஈபிஎஸ் ட்வீட்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடந்துள்ளதாக செய்திகள் வருகின்றன, இது போன்ற நிகழ்வுகளால் தலைநகர் கொலைநகராக மாறி,சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகி இருக்கிறது.
காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால், தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது.’ என பதிவிட்டுள்ளார்.
காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் விடியா அரசின் முதல்வர் @mkstalin சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் கருத்துக்களை முடக்குவதிலே முழு முயற்சியுடன் இருப்பதால்,
தமிழ்நாட்டின் எதிர்காலம் குறித்த அச்சம் ஏற்படுகிறது.2/2— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 24, 2022