18 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு ..!உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் உச்சநீதிமன்றத்திலும் வரும்…!அடித்து கூறும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை
தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் உச்சநீதிமன்றத்திலும் வரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று முன்தினம் (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
நேற்று (செப்டம்பர் 26 ஆம் தேதி) 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க விவகாரத்தில் தமிழக சபாநாயகர் சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் உச்சநீதிமன்றத்திலும் வரும் .அதேபோல் தேர்தல் எப்போது வந்தாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது.உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியது திமுகதான். நீதிமன்றம் அனுமதி அளித்தால் தேர்தலை நடத்த தயார் என்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.