டிடிவி தினகரன் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த மதுரை புறப்பட்டார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.அதேபோல் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்.இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அமமுக வெல்லும்.எடியூரப்பா வழக்கில் எப்படி உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என கூறியதோ, அதே போல் இந்த வழக்கிலும் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.
தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த மதுரை புறப்பட்டார் டிடிவி தினகரன்.இதேபோல் குற்றாலத்தில் உள்ள எம்எல்ஏக்களும் மதுரைக்கு விரைந்துள்ளனர்.
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…