எம்ஜிஆர், ஜெயலலிதா, இறைவனின் நல்லாசியால் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கினார்.3வது நீதிபதி சத்யநாராயணன். 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கினார்.
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பின்போது முதலமைச்சர் பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ஆஜராகிறார். தகுதிநீக்க எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆஜராகினார்கள் .சபாநாயகர் தரப்பில் ஆரியமா சுந்தரம், அரசு தலைமை கொறடா தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகினார்கள்.
தீர்ப்பை வாசித்த 3 வது நீதிபதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்..மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.அதேபோல் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா, இறைவனின் நல்லாசியால் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வந்துள்ளது.எப்போது இடைத்தேர்தல் வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார் .
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…