18 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு .!உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு …!தினகரன் அணி  அதிரடி முடிவு

Published by
Venu

18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தினகரன் அணி  முடிவு செய்துள்ளது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நேற்று (செப்டம்பர் 25 ஆம் தேதி) தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.

அவர் வழங்கிய தீர்ப்பில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை.தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.அவர் கூறுகையில், அரசியலில் பின்னடைவு என்று ஒன்றும் இல்லை, இது ஒரு அனுபவமே.தகுதிநீக்கம் செல்லும் என்ற தீர்ப்பு குறித்து 18 எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம்.தேர்தலை சந்திப்பதா அல்லது மேல்முறையீடு செய்வதா என்பதை எம்.எல்.ஏ.க்களே முடிவு செய்வார்கள்.இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அமமுக வெல்லும்.எடியூரப்பா வழக்கில் எப்படி உச்சநீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லாது என கூறியதோ, அதே போல் இந்த வழக்கிலும் நடக்க வாய்ப்புள்ளது என்றும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்தார்.

நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்த மதுரை புறப்பட்டார் டிடிவி தினகரன்.அதேபோல் குற்றாலத்தில் உள்ள எம்எல்ஏக்களும் மதுரைக்கு விரைந்தனர்.
இந்நிலையில் இன்று  தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களுடன் மதுரையில் டி.டி.வி தினகரன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
ஆலோசனைக்கு பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ் செல்வன் கூறுகையில், 18 எம்எல்ஏக்கள் வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.  மதுரையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மேல்முறையீடு செய்வது என முடிவு  செய்யப்பட்டுள்ளது.சபாநாயகர் செய்தது தவறு என்பதை நிரூபிக்கவே உச்சநீதிமன்றம் செல்கிறோம். மேலும் இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம்.அமமுக சார்பில் தேர்தலை சந்தித்து வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Recent Posts

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கையின் புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமனம்.!

இலங்கை : இலங்கை அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சி தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரதமராக இருந்த…

36 mins ago

செஸ் ஒலிம்பியாட் : “கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி”! கிராண்ட்மாஸ்டர் குகேஷ் பேச்சு!

சென்னை : ஹங்கேரி நாட்டின் தலைநகரான புடாபெஸ்ட்டில் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது நடைபெற்று முடிந்தது. இந்த தொடரின் இறுதிச்…

49 mins ago

“அந்த படத்துக்கு பதிலா கொட்டுக்காளி, ஆடுஜீவிதம் படங்களை ஆஸ்காருக்கு அனுப்பியிருக்கலாம்”…வசந்த பாலன் கருத்து!

சென்னை : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் விருது என்றால் அது "ஆஸ்கர் விருது" தான். இந்த…

1 hour ago

“24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.,” தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!

சென்னை : தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் இன்று காலை 11 மணியளவில் டாக்டர் மல்லிகை தெருவில்…

2 hours ago

லட்டு விவகாரம்., பவன் கல்யாணிடம் மன்னிப்புக் கேட்ட ‘மெய்யழகன்’ கார்த்தி.!

சென்னை : கார்த்தி, அரவிந்த் சாமி நடித்து, '96' பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் இந்த வாரம் ரிலீசாக உள்ள…

3 hours ago

மக்களே! தமிழகத்தில் (25.09.2024) புதன்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 25.09.2024) அதாவது , புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…

3 hours ago