மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி மனு அளித்தார்.
பின்னர் தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு கடந்த ஜூலை 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக 3வது நீதிபதி சத்யநாராயணன் அறிவித்தார்.அதன்படி ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விசாரணை நடத்தினார் நீதிபதி சத்யநாராயணன்.
நீதிபதி சத்யநாராயணன் முன்பு தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
நீதிபதி சத்யநாராயணன் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது.
இதனால் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
எம்எல்ஏக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில் 18 பேரையும் அ.தி.மு.க. கடத்தக் கூடும் என்று டி.டி.வி. தினகரன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அறிவுரை வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இரவு குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ விடுதிக்கு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வந்தனர்.இதன் பின் அக்டோபர் 23 ஆம் தேதி மகாபுஷ்கர விழாவின் நிறைவு நாளில் , பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் புனித நீராடினார்கள்.
இந்நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளார் 3வது நீதிபதி சத்யநாராயணன். 3வது நீதிபதி சத்யநாராயணன் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறார்
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…