18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு…! ஓரிரு நாட்களில் விசாரணை…! முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனை…!

Published by
Venu

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
Image result for dinakaran

மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி மனு அளித்தார்.
பின்னர் தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு கடந்த ஜூலை 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு ஜூலை 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக 3வது நீதிபதி சத்யநாராயணன் அறிவித்தார்.அதன்படி ஜூலை 23 முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விசாரணை நடத்தினார் நீதிபதி சத்யநாராயணன்.

நீதிபதி சத்யநாராயணன் முன்பு தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், பி.எஸ்.ராமன் ஆகியோரும், சபாநாயகர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், அரசு தலைமை கொறடா தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதஹ்கி ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

நீதிபதி சத்யநாராயணன் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியானது.

இதனால் நேற்று  தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்தார்.
 
எம்எல்ஏக்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஓரிரு நாளில் தீர்ப்பு வர வாய்ப்பு உள்ள நிலையில் 18 பேரையும் அ.தி.மு.க. கடத்தக் கூடும் என்று டி.டி.வி. தினகரன் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் 18 பேரையும் குற்றாலத்தில் தங்கியிருக்க அறிவுரை வழங்கி உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் நேற்று இரவு  குற்றாலத்தில் உள்ள இசக்கி ஹைவியூ விடுதிக்கு தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வந்தனர்.
இந்நிலையில் தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் முதலமைச்சர் பழனிசாமி சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ,அமைச்சர் வேலுமணி,கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

8 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

8 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

9 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

10 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

13 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

13 hours ago