நாடாளுமன்ற தேர்தலுடன் இடை தேர்தலா….?பாஜக…..சூசக கருத்து…!!
நாடாளுமன்ற தேர்தலுடன் இடை தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக சூசக தகவலை தெரிவித்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசின் மீது அதிருப்தி அடைந்த 18 எம்.எல்.ஏக்கள் அப்போதைய ஆளுநரை சந்தித்து முதல்வரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.இதனால் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறிவந்தது ஆளும் கட்சி.அரசிற்கு எதிராக செயல்பட்டதாக கொடறா உத்தரவின் பேரில் 18 பேர் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுத்தார் அது தான் தகுதி நீக்கம் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.
இதனை எதிர்த்து 18 எம்.எல்.ஏக்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தகுதிநீக்கம் செல்லும் என்று உத்தரவிட்ட நிலையில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது இதனை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன் அமர்வு சபாநாயகரின் தகுதி நீக்கம் செல்லும் என்று உத்தரவிட்டது.இந்த தீர்ப்பு தினகரன் அணியினர் மற்றும் 18 ஏம்.எல்.ஏக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் 18 தொகுதிகள் காலியாக உள்ளது மற்றும் திருவாரூர்,திருப்பரங்குன்றம் உள்ளிட்ட மொத்தம் 20 தொகுதிகளும் காலியாக உள்ளது மேலும் தொகுதி மக்கள் தங்களின் சிறு பிரச்சணைகளை கூட சரிசெய்ய முடியாமல் போகிறதுக்கு தொகுதி காலியாக உள்ளதே காரணமாகும்.ஆனால் ஆட்சி இந்த தீர்ப்பின் மூலம் தப்பியது.லட்டுக்களை கொடுத்து மகிழ்ச்சியை தெரியப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாடாளுமன்ற தேர்தலோடுதான் நடைபெற வாய்ப்பு உள்ளது என்று சூசகமாக தெரிவித்தார்.18 பேர் தகுதிநீக்கம் குறித்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில், நீதிமன்றத்தில் தினகரனின் முயற்சி படு தோல்வியடைந்தன் விளைவாக தான் இடைத்தேர்தலை தமிழகம் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.
DINASUVADU