18 MLAக்கள் தகுதி நீக்கவழக்கில் மூன்றாவது நீதியரசர் அளிக்கும் தீர்ப்பு நாளை மறுநாள் செப்டம்பர் 5 ந் தேதி புதன்கிழமை வெளிவர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 18 எம்.எல்.ஏ.க்களும் கட்டளையை மீறியதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அ.தி.மு.க. கொறடா சபாநாயகருக்கு சிபாரிசு செய்தார். இதை ஏற்று 18 எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் அளிக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து 18 பேரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லும் என்று அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜியும், சபாநாயகர் உத்தரவு செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பளித்தனர்.
இதனிடையே 18 எம்.எல்.ஏ.க்களும் மீதுள்ள இந்த வழக்கில் அடுத்த வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் புதன்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்ப்பு 18 எம்.எல்.ஏ.களுக்கும் சாதகமாக வரும் பட்சத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் மேலும் தமிழக அரசியலில் இந்த தீர்ப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, எந்த…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது. சமீபத்தில் கடலூர்…
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…