18 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இட மாற்றம்! தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு!

tamil nadu government

சென்னை : தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து மாநில அரசின் முதன்மை செயலாளர் பி.அமுதா ஐஏஎஸ் அதிரடியான உத்தரவு பிறப்பித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் கடந்த 5ஆம் தேதி படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இது சட்டம் ஒழுங்கு குறித்து கேள்விகள் எழும்ப தொடங்கியது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிடம் செய்யப்பட்ட நிலையில்,  சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து, அடுத்ததாக தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

1.ஐபிஎஸ் அதிகாரி கண்ணன், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையராக நியமனம்.

2.சட்டம் – ஒழுங்கு ஐஜி அஸ்ரா கர்க் வடக்கு மண்டல ஐஜியாக பணியிடமாற்றம் .

3.ஐபிஎஸ் அதிகாரி பிரேம் ஆனந்த் சின்ஹா தென் மண்டல ஐஜியாக  நியமனம்

4.சேலம் மாநகர காவல் ஆணையராக பிரவீன் குமார் அபினபு நியமனம்

5.ஐபிஎஸ் அதிகாரி லட்சுமி திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமனம்

6.காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு ஏடிஜிபியாக தமிழ் சந்திரன் நியமனம் .

7.சிபிசிஐடி ஐஜியாக இருந்து வரும் ஐபிஎஸ் அதிகாரி அன்புவுக்கு சிபிசிஐடி ஏடிஜிபியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

8.ஐபிஸ் அதிகாரி அபின் தினேஷ் தாம்பரம் காவல் ஆணையராக நியமனம்

9.ஐபிஎஸ் அதிகாரி கே.எஸ்.நரேந்திரன் நாயர் சென்னை வடக்கு கூடுதல் காவல் ஆணையராக நியமனம்.

10.ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க் வடக்கு மண்டல ஐஜியாக (சட்டம் ஒழுங்கு) நியமனம்.

11. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் ஆயுதப்படை பிரிவு ஏடிஜிபியாக அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

12. ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்.

13.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏடிஜிபி – காவல்துறை தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் ஏடிஜிபியாக ஐபிஎஸ் அதிகாரி ஆர்.தமிழ்சந்திரன் நியமனம்

14. கடலோர காவல் படை ஏடிஜிபியாக சஞ்சய் குமார் நியமனம்.

15.ஐபிஎஸ் அதிகாரி பி.விஜயகுமார்  சென்னை ஆயுதப்படை காவல்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

16.ராஜீவ் குமார் ஐபிஎஸ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு இயக்குநராக நியமனம்

17. ஐபிஎஸ் அதிகாரி வினித் தேவ் காவல்துறை நிர்வாகப் பிரிவு சென்னை காவல்துறை தலைமையகத்தின் ஏடிஜிபியாக நியமனம்

18. ஐபிஎஸ் அதிகாரி ஹெச்.எம்.ஜெயராம் ஆயுதப்படை காவல் பிரிவு ஏடிஜிபி – மாநில குற்றப்பிரிவு ஆவணக் காப்பகத்தின் ஏடிஜிபியாக நியமனம்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்