#Breaking: கொரோனாவால் தமிழகத்தில் ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு.. மக்கள் அச்சம்!

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 367 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும், ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 40,698 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக, சென்னையில் ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,924 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 18 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 367 ஆக அதிகரித்தது. இதில் தனியார் மருத்துவமனையில் 8 பேரும், அரசு மருத்துவமனையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், 13 ஆம் நாளாக தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டியது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.