ஜூலை மாதத்தில் 18.46 லட்சம் பயணிகள் பயணம் – சென்னை மெட்ரோ அறிவிப்பு..!
சென்னை மெட்ரோ இரயில்களில் ஜூலை மாதத்தில் மட்டும் 18.46 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைபிடிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததைத் தொடர்ந்து சென்னை மெட்ரோ இரயில் சேவைகள் கடந்த 21.06.2021 முதல் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் மீண்டும் தொடங்கியது.
21.06.2021 முதல் 31.07.2021 வரை மொத்தம் 22,02,045 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
21.06.2021 முதல் 30.06.2021 வரை மொத்தம் 3,55,579 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
01.07.2021 முதல் 31.07.2021 வரை மொத்தம் 18,46,466 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
அதிகபட்சமாக 26.07.2021 அன்று 74,380 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2021. ஜூலை மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 30,160 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு (Travel Card Ticketing System) முறையைப் பயன்படுத்தி 10,06,615 பயணிகள் பயணம் செய்துள்ளனர்..
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டில் ஒருவழிப்பயண அட்டை, இருவழிப்பயண அட்டை, பலவழி பயன்பாடு அட்டை ஆகியவற்றில் 11.09.2020 முதல் 20% கட்டணத் தள்ளுபடி அளித்து வருகிறது. மெட்ரோ இரயில் பயண அட்டைகளை (Travel Card) பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22.02.2021 முதல் 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மெட்ரோ இரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ இரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பயணிகள் முகக்கவசம் அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. கடந்த 21.06.2021 முதல் 31.07.2021 வரை முகக்கவசத்தை அணியாமல் அல்லது சரியாக அணியாமல் பயணம் செய்ததற்காக 102 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.20,400 வசூலிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Chennai Metro Rail (@cmrlofficial) August 2, 2021