18 தொகுதி இடைத்தேர்தல் தடை கோரிய வழக்கு …! தேர்தல் ஆணையம் ,18 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ்…!
18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.
அவர் வழங்கிய தீர்ப்பில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்.மேலும் அவர் கூறுகையில்,18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் .சபாநாயகர் முடிவில் தவறு இல்லை. தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு வழங்கினார்.அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார்.அதேபோல் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை அலுவலகம் கடிதம் அனுப்பியது.அதேபோல் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு நகலும் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் 18 தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை , தேர்தல் ஆணையத்துக்கும், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் 18 தொகுதிகள் தொடர்பான வழக்கில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும்
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. மேலும் வழக்கை ஜனவரி 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை .