18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு:தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலை மாறும்! தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்
நிருபர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த தீர்ப்பு வந்தபிறகு தமிழகத்தில் நிலையான தன்மை ஏற்படும். மேலும், ஆட்சி கவிழ்கிறதா? அல்லது நிலை பெறுமா? என்பது தெரியவரும்.
காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக மாநிலம் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்படாததற்கு அம்மாநில அரசும், மத்திய அரசுமே பொறுப்பு. இந்த விஷயத்தில் தமிழக அரசு வேகமாக செயல்படவேண்டும். காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனை. இதில் கட்சிகளை வைத்து இப்பிரச்சனையை அணுக முடியாது. எனவே தமிழக அரசு போராடி மத்திய அரசை தலையிடச்செய்து தீர்வு காணவேண்டும்.
எஸ்.வி.சேகர் மீது தமிழக காவல்துறைதான் வழக்கு பதிவு செய்தது. ஆனால் அவரை கைது செய்யவில்லை என்றால் காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதா? அல்லது காவல் துறை பயப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.