18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளித்தனர்.
காலையில் 6 வழக்குகளின் விசாரணை முடிந்த பிறகு 7வது வழக்காக தகுதிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தலைமை நீதிபதி இந்திராபனர்ஜி தீர்ப்பு:
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திராபனர்ஜி தெரிவித்துள்ளார்.சபாநாயகர் உத்தரவில் நீதித்துறை தலையிடக்கூடாது என்பதால் தகுதி நீக்கம் செல்லும் என்றும் சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது .சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறும் போது இதற்கான இடைதேர்தல் நடத்தக்கூடாது என்ற இடைக்காலத்தடை தொடரும் மேலும் இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று கூறினார்.
நீதிபதி சுந்தர் தீர்ப்பு:
18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்துள்ளார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்ததால் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
புதிய அமர்வு தகுதி நீக்க வழக்கை விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை தேர்தல் நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது.
பின்னர் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி எம்.சுந்தர் 134 பக்கங்களை கொண்ட தீர்ப்பினை வழங்கினார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் மாறுபட்ட தீர்ப்பின் விவரம் கிடைத்த பிறகு வழக்கை விசாரிக்கும் 3ஆவது நீதிபதி யார் என்பதை மூத்த நீதிபதி குலுவாடி ஜி ரமேஷ் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மெக்கா: இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா, மதீனா மழை வெள்ளத்தில் மிதக்கின்றன. சவுதி அரேபியாவின் மெக்கா மற்றும் மதீனாவில் நேற்று…
சென்னை : சமீபத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்ற சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு விழாவில் கருப்பு நிற துப்பட்டா அணிந்திருந்த…
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும்…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2வது நாளான இன்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்…
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள மாடு பிடி வீரர்கள் தயாராகி வருகிறார்கள்.…
சென்னை : சினிமாதுறையை போல கிரிக்கெட் துறையிலும் வீரர்கள் விவாகரத்து செய்தி வெளியாவது என்பது வழக்கமான ஒரு விஷயமாக மாறிவிட்டது…