18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: நாளை நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணை!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் நேற்று தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.
நேற்று வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் வழக்கு 3 ஆவது நீதிபதி சத்தியநாராயணனுக்கு மாற்றப்பட்டிருந்தது .
இந்நிலையில் தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளை நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.