18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக 3வது நீதிபதி சத்யநாராயணன் அறிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி மனு அளித்தார்.
பின்னர் தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு வரும் 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக 3வது நீதிபதி சத்யநாராயணன் அறிவித்துள்ளார். வரும் 23 முதல் 27-ம் தேதி வரை 5 நாட்கள் தொடர் விசாரணை என்று நீதிபதி சத்யநாராயணன் அறிவித்துள்ளார்.
நியூ யார்க் : அமெரிககாவை சேர்ந்த நிதிசார்பு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்திய வர்த்தகர்கள் மத்தியில் மிக பிரபலமான…
ஸ்ரீஹரிகோட்டா : விண்ணில் 2 செயற்கைகோள்களை இணைத்து அதன் மூலம் 2 செயற்கைகோள்களுக்கு இடையே எரிபொருள் அல்லது வேறு பொருட்கள்…
ராஜ்கோட்: மகளிருக்கான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்தை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி தொடரை…
மும்பை: பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து மர்ம நபர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பாந்த்ராவில்…
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும்…
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…