18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு:இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வருகிறது!
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் ஆகியோர் வேறுபட்ட தீர்ப்புகளை வழங்கினர்.
மேலும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இதற்கான தீர்ப்பை அறிவிக்க மூன்றாவது நீதிபதி விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.அதன்படி மூன்றாவது நீதிபதியாக சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டார்.
பின்னர் டிடிவி தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை விரைந்து விசாரிக்க கோரி உயர்நீதிமன்ற தலைமை பதிவாளரிடம் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 2 ஆம் தேதி மனு அளித்தார்.
பின்னர் தலைமை பதிவாளரிடம் மனு அளித்ததையடுத்து வழக்கு இன்று விசாரணைக்கு வரும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மாலை 4 மணிக்கு விசாரணைக்கு வருகிறது. 3வது நீதிபதியாக நியமிக்கப்பட்ட சத்தியநாராயணன் வழக்கை விசாரிக்கிறார்.