சென்னையில் ஒரே நாளில் 174 பேர் கொரோனா.!
சென்னையில் இன்று மட்டும் 174 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில், இன்று மேலும் 231 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2757 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா பாதித்த 29 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,341 ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் ஒரே நாளில் 174 பேருக்கு கொரோனா பாதிப்பு ஆக உயந்துள்ளது. அதில், இன்று மட்டும் சென்னையில் 174 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால், இதுவரை மொத்தமாக 1257 பேருக்கு சென்னையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.