தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 1,702 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,702 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,95,935 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 193 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 29 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,639 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,892 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 25,41,432 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,62,173 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,04,28,400 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 19,864 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் குடியிருந்தாலும் திருச்செந்தூர் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக உள்ளது. தூத்துக்குடி -கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய …
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தானது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டார். அங்கு லண்டனில்…
சென்னை : வரும் நவம்பர்-22ம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரை விளையாடவுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
தஞ்சை : 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக தலைமை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, 5 பேர் கொண்ட தேர்தல்…