ஆவினில் 170 பேர் பணி நீக்கம் -ஆவின் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த புகாரில் 170 ஊழியர்களை ஆவின் நிர்வாகம் பணி நீக்கம் செய்து நடவடிக்கை
ஆவினில் முறைகேடாக பணியில் சேர்ந்த புகாரில் 170 ஊழியர்களை ஆவின் நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. 2020-2021 இல் முறையான வழிகாட்டுதலை பின்பற்றாமல் நியமிக்கப்பட்ட புகாரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆறு மாதங்களுக்கு முன்னதாக சுமார் 500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஆவின் நிர்வாகம் மீண்டும் பணிநீக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.