17 வயது கல்லூரி மாணவியை கடத்தி 5 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்!
- ஹைதிராபாத் பிரியங்கா ரெட்டி மரணம் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகாவது பாலியல் வன்கொடுமை குறையும் என பார்த்தால், பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- சேலம் மாவட்டத்தில் ஒரு ஆட்டோ டிரைவர், 17 வயது கல்லூரி பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
ஹைதிராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் விசாரணையின் போது தப்பி செல்ல முயன்றதாக கூறி என்கவுண்டரில் கொல்லப்பட்டனர். அதற்கடுத்தாவது பாலியல் வன்கொடுமை குற்றம் குறையும் என நினைத்தால், தற்போதும் அது தொடர்கதையாகவே இருப்பது வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஒரு 17 வயது இளம் பெண் கடந்த 10 ஆம் தேதி கல்லூரி சென்று வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றுள்ளார். ஆனால் அவர் அன்று வீடு திரும்பவில்லை. உடனே பெற்றோர்கள் தேடி பார்த்து கிடைக்காமல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
அப்பெண்ணை தேடி தீவிரமாக விசாரணையில் களமிறங்கினர். அதன் பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராமேஷ் குமார் என்பவர் மீது சந்தேகமடைந்து அவரை கைது செய்து விசாரிக்கையில், அந்த நபர் தான் அப்பெண்ணை கடத்தி கடந்த 5 நாட்களாக பாலியல் துன்புறுத்தல் செய்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் அப்பெண்ணை மீட்டு பெற்றோர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.