17வயது சிறுமியை 55 வயது கிழவன் 2 இளைஞர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததை தொடர்ந்து சிறுமி 8 மாத கர்ப்பிணியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் அருகே உள்ள குண்டலப்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி தனது தாய் மாமா வீட்டில் தங்கி நின்று படித்து வருகிறார். 10ஆம் வகுப்பு முடித்த இவரது வயறு பெரிதாக தொடங்கியுள்ளது. வயிற்றில் கட்டி இருப்பதாக கருதி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிறுமியை சோதனை செய்தனர். அப்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சிறுமியிடம் விசாரித்த போது மூன்று பேரால் சிறுமி கற்பழிக்கப்பட்டதாக தெரிய வந்தது.
முன்னாள் கூட்டுறவு சங்க ஊழியரான உதயணன் (55) என்பவர் தாய் மாமன் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி மது போதையில் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அதே போன்று ராமராஜ் மற்றும் சக்தி ஆகிய இரு இளைஞர்களும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தை அடுத்து சிறுமி கர்ப்பமாகியுள்ளார். அதனையடுத்து ஊர்வலம் மக்கள் அனைவரும் உதயணனை சுற்றி வளைத்து கேட்ட போது சிறுமியிடம் அத்துமீறியதை ஒப்பு கொண்டுள்ளார். அதனையடுத்து உதயணனை மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனையடுத்து குற்றவாளியான சக்தி வேறொரு பெண்ணை வியாழக்கிழமை அன்று திருமணம் செய்யவிருந்த நிலையில், மணமேடையில் இருந்து போலீசார் சக்தியை அழைத்து சென்று ஒரு பெண்ணின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளனர். அதே போன்று இன்னொரு குற்றவாளியான ராம்ராஜையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். சிறுமியின் வயிற்றில் வரும் கருவை கலைத்தால் சிறுமியின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…