திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான 17 வயது சிறுமி, விஷமருந்தி தற்கொலை செய்துள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கவரப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக புதுக்கோட்டை மாவட்டம், பகவன்பட்டியை சேர்ந்த ராம்கி என்பவர், ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அந்த சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது அந்த பெண்ணின் வீட்டில் ராம்கியுடன் திருமணம் செய்து வைப்பதாக முடுவெடுத்தனர். ஆனால், கர்ப்பமடைந்த அந்த சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என ராம்கியின் பெற்றோர் கூறி வந்தனர். அதுமட்டுமின்றி, அந்த சிறுமியின் பெற்றோரிடம் தரக்குறைவாக பேசினார்கள்.
இதனால் அந்த சிறுமி, தனது பெற்றோர்களுடன் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராம்கி என்ற இளைஞரை மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் மீது புகாரளித்தார். புகாரின் பேரில், போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
புகாரளித்து நீண்ட காலங்கள் ஆகியும், ராம்கியை கைது செய்யாத காரணத்தினால், அந்த சிறுமி விஷமருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அப்பொழுது சிறுமியை மீட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சி செய்த அந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த பகவன்பட்டியை சேர்ந்த ராம்கி என்பவர், மணப்பாறை அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…