முதலமைச்சர் பழனிசாமி கோவையில் 17 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். கோவையில் கனமழையின் காரணமாக ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் பக்கவாட்டு சுவர் இன்று அதிகாலை சாய்ந்தது. இந்த சம்பவத்தில் 4 வீடுகள் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17- பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 17 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 17 பேரின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…