17 பேர் உயிரிழப்பு – நாளை கோவை செல்கிறார் முதல்வர்

Default Image

முதலமைச்சர் பழனிசாமி கோவையில் 17 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின்  குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். கோவையில் கனமழையின் காரணமாக ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள  மேட்டுப்பாளையம் அருகே நடூர் பகுதியில் உள்ள ஏடி காலனியில் உள்ள குடியிருப்பின் பக்கவாட்டு சுவர் இன்று அதிகாலை சாய்ந்தது. இந்த சம்பவத்தில் 4 வீடுகள் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17- பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்து குறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 17 பேரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த இடிபாடுகளில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வீடு இடிந்து விழுந்ததில் உயிரிழந்த  17 பேரின் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.முன்னதாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
UGC CM Stalin
Rishabh Pant
Parandur Protest
life imprisonment
TVK Leader Vijay - TN CM MK Stalin
Vijay