பொது இடங்களில் குப்பை, கழிவு கொட்டியதால் இதுவரை 17 லட்சம் அபராதம்.! – சென்னை மாநகரட்சி அதிரடி.!
பொது இடங்களில் குப்பை கொட்டுவது, கழிவுகளை கொட்டுவது, சுவரொட்டிகள் ஒட்டியது தொடர்பாக சென்னை மாநகராட்சி 318 நபர்களிடம் இருந்து 17 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. மேலும் முன்பை விட விதிமுறைகள் கடுமையாக மாற்றப்பட்டு அபத்தங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இதில், பொது இடங்களில் குப்பை கொட்டியதாகவும், கட்டுமான கழிவுகளை பொது இடங்களில் கொட்டியதாகவும், விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டியதாகவும் இதுவரையில் 318 பேர் மீது புகார்கள் பதியப்பட்டுள்ளது. அவர்களிடம் இருந்து இதுவரையில் 17 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.