17 பேர் உயிரிழந்த குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணை ஆரம்பம்!

Default Image

அதுல்ய மிஸ்ரா குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணை சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணையை  தொடங்கினார்.

தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் சிக்கி, அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்ற கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் என 17 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ராவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அவர் 2 மாதங்களுக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்