16-வது மெகா தடுப்பூசி முகாம்; 17 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..!

16-வது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 17,31,277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 16-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளரை சந்தித்தார். அப்போது, ஜனவரி 3-ம் தேதி போரூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் துவங்கி வைக்கிறார். 16-வது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தமாக 17,31,277 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
5,17,126 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 12,14,151 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கூட தெரிந்து கொள்ளாத எதிர்க்கட்சி தலைவர் இருக்கிறார் என்பது வேதனையாக இருக்கிறது.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தரப்பில் இருந்து இதுவரை 42,671 விண்ணப்பங்கள் வந்துள்ளன என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025