பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜனவரி 11ம் தேதி முதல் சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு ஜனவரி 16 முதல் 18ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘2022-ஆம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னையில் 5 சிறப்புப் பேருந்து நிலையங்களிலிருந்து, 11/01/2022 முதல் 13/01/2022 வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
1. மாதவரம் புதிய பேருந்து நிலையம்
2. கே.கே.-நகர் மாஃபோக பெருந்து நிலையம்.
3, அ) தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையும் (MEPZ)
ஆ) தாம்பரம் இரயில் நிலையப் பேருந்து நிறுத்தம்
4. பூந்தமல்லி பேருந்து நிலையம்
5. புரட்சித்தலைவர் டாக்டர்.எம்.ஜி.ஆர். பேருந்து நிலையும், கோயம்பேடு
2022 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வரும் 11/01/2022 முதல் 13/01/2022 வரையில், சென்னையிலிருந்து தினாரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10.300 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து 6,468 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 16,768 பேருந்துகள் இயக்கப்படும்.
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 16/01/2022 முதல் 18/01/2022 வரையில், தினசரி இயக்கக் கூடிய 2.100 பேருந்துகளுடன் 3,797 சிறப்புப் பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,612 பேருந்துகளும் என ஆக மொத்தம் 16,709 பேருந்துகள் இயக்கப்படும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 முன்பதிவு மையங்களும், MEPZ (தாம்பரம் சானிடோரியம்) பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து கொள்ள நடைமுறையில் உள்ள இணையதன வசதியான, www.tnstc.in. tnstc official app, www.redbus.in, www.peytm.com மற்றும் www.bmindia.com போன்ற இணையதளங்கள் மூலமாகவும் முன்பதிவு செய்துகொள்ள வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
பேருந்துகளின் இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும் மற்றும் இயக்கம் தொடர்பு குறித்து புகார் தெரிவிப்பதற்கு 94450 14450, 94450 14436 ஆகிய தொலைபேசி மணி எண்களை (24×7) கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேரமும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தல் உள்ளிட்ட புகார்களுக்கு 1800 425 6151, 044 24749002 என ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பொதுமக்களின் வசதிக்காக, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்து, மேற்கூறிய 4 பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இணைப்புப் பேருந்துகள் 24 மணி நேரமும் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…