40 மாதங்களில் 1666 ரேஷன் கடைகள் திறப்பு – தமிழ்நாடு அரசு பெருமிதம்!

திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1,666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

ration shop

சென்னை: தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் கடந்த 40 மாதங்களில் 1666 புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. 2,778 நியாய விலைக்கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழை எளிய பொதுமக்களின் வசதிக்காக அவர்களுடைய குடியிருப்புகளுக்கு அருகிலேயே நியாய விலைக் கடைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக 633 முழுநேர நியாய விலைக் கடைகளும், 1,033 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 1,666 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன.

31.12.2023 வரை நியாய விலைக் கடைகளின் உட்புற மற்றும் வெளிப்புறச் சூழலை மேம்படுத்துவதற்கான பணிகள் 2,778 நியாய விலைக் கடைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. விவசாயிகள் விளைவிக்கும் நெல்லினை இடைத்தரகர்கள் தலையீடின்றியும் கால தாமதமின்றியும் உடனடியாக விற்பனை செய்யும் பொருட்டு ஆன்லைன் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டு 1 கோடியே 8 இலட்சத்து 35 ஆயிரத்து 621 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், ரூ.100 கோடி மதிப்பீட்டில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமான நெல் சேமிப்பு கிடங்குகள் உள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்