சென்னை அண்ணாநகரை சேர்ந்த 16 வயது இளம்பெண் இணையத்தில் சென்னையை சேர்ந்த ஒரு வாலிபருடன் பேசி வந்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆரம்பத்தில் பேசிய அந்த வாலிபர் போகப்போக சற்று ஆபாசமாக பேசியுள்ளார். உடனே சிறுமி அந்த வாலிபருடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
ஆனால் அந்த வாலிபரும் வேறொரு இன்ஸ்டாகிராம் முகவரியிலிருந்து ஒரு பெண்ணின் பெயரில் அந்த அந்த சிறுமியுடன் மீண்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அச்சிறுமியும் வேறொரு பெண் போல என நினைத்து அந்த வாலிபருடன் பேசி வந்துள்ளார். இருவரும்
வீடியோ கால் செய்யும் அளவிற்கு இணையத்தில் பேசியுள்ளனர். அப்போது வீடியோ காலிங் மூலம் அந்த சிறுமி குளிக்கும் போது எடுக்கப்பட்ட அரை நிர்வாண வீடியோவை அந்த வாலிபன் தனது போனில் சேகரித்து வைத்து விட்டான்.
அந்த அரை நிர்வாண வீடியோவை அந்த பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு அந்த வாலிபன் அனுப்பியுள்ளான். தன்னுடன் நெருக்கமாக பழக வேண்டும் இல்லை என்றால் இந்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என அந்த வாலிபன் மிரட்ட உடனே அச்சிறுமி பதறி போனார். சிறுமி இது குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். உடனே அச்சிறுமியின் தாயார் போலீசில் புகார் அளித்து விட்டார். அந்த வாலிபரை தற்போது போலீஸார் போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்து உள்ளனர்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…