செல்போன் இல்லாமையால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள இயலாத 16 ஏழை மாணவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் செல்போன்கள் வாங்கி கொடுத்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. எனவே மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைப்பெற்று வருகிறது. மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்டவைகள் வாங்க இயலாமல் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள முடியாமல் பல மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது சொந்த செலவில் 16 மாணவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுத்து உதவியுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 16 மாணவர்கள் ஆங்கில வழியிலான பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர். ஏழைக் குடும்பத்தை சார்ந்த இவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க இயலாமல் போயுள்ளது. எனவே அதே பள்ளியில் பணிபுரியும் கணித பட்டதாரி ஆசிரியரான பைரவி மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை புரிந்து கொண்டு 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை 16 மாணவர்களுக்கு வாங்கி கொடுத்ததுடன், அதற்கான சிம்கார்டு மற்றும் ரீசார்ஜையும் செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய ஆசிரியர் பைரவி, தான் இதை உதவியாக செய்யவில்லை என்றும், சேவையாகவே கருதுகிறேன் என்றும், இதுபோன்று மேலும் 25 மாணவர்களுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதற்கான முயற்சி செய்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் இனி முதல் தங்கள் பள்ளிகளில் 10ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்றும், இதன் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். 16 மாணவர்களின் எதிர்காலத்திற்காக உதவி ஆசிரியருக்கே முன்னுதாரணமாக விளங்கும் பைரவி ஆசிரியருக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம்…
மன்பிஜ் : சிரியாவின் மன்பிஜ் நகரில் நேற்று மதியம் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்த கார் வெடித்து சிதறியதில், அதன் அருகே இருந்த…
ஈரோடு : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியோடு நிறைவு பெற்றது. அரசியல் கட்சியினர்…
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…