அதிமுக பிரமுகர் கொலை..! 16 பேரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு..!
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அதிமுக பிரமுகர் மூர்த்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 16 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி. விராலிமலையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அதிமுக பிரமுகர் மூர்த்திக்கும் , வீராச்சாமிக்கும் இடையே பிரச்சினை இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி மூர்த்தி அழைத்ததன் பேரில் வீராச்சாமி, அவரது மகன் முத்து இவர்களது உறவினர்கள் இரண்டு பேர் தோட்டத்துக்கு சென்றுள்ளனர்.
அப்போது அங்கு 10-க்கும் மேற்பட்ட கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் வீராச்சாமி உள்ளிட்ட நான்கு பேரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலே வீராச்சாமி, அவரது மகன் முத்து ஆகிய இருவரும் இறந்தனர்.
படுகாயமடைந்த ஜெயராமன், சிவசங்கு ஆகியோரை போலீஸார் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூர்த்தி ஜாமீனில் வெளிவந்த நிலையில் களமாவூரில் உள்ள தனது வீட்டின் அருகே இருந்த மூர்த்தியை மர்ம கும்பல் அரிவாளால் கொடூரமாக வெட்டினர். இதில் மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.