தமிழக அரசு 16 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர் வழங்கியும், 32 ஐ பி எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சென்னையில் தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக புக்யா சினேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.யாக வி. சசிமோகன் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை நகர் வடக்கு சட்ட ஒழுங்கு துணை ஆணையராக ஜி.எஸ் அனிதா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மத்திய மண்டல பொருளாதார குற்றபிரிவு எஸ்.பி.யாக எம். கிங்ஸ்லின் நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்ட எஸ்.பி.யாக டேங்கரே பிரவீன் உமேஷ், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.யாக ஜி.சந்தீஷ் , தேனி மாவட்ட எஸ்.பி.யாக சிவ பிரசாத், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி.யாக தங்கத்துரை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.யாக ஃபெரோஸ்கான் அப்துல்லா, விழுப்புரம் மாவட்டஎஸ்.பி.யாக தீபக் சிவாச், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக சண்முகம் , நெல்லை நகர் மேற்கு துணை ஆணையராக வி. கீதா , அரியலூர் மாவட்ட எஸ்.பி.யாக எஸ்.செல்வராஜ் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்று மொத்தம் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறுத்தை தாக்கி பலி – ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!
16 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வு:
ஐஜி ஆர்.தமிழ் சந்திரனுக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம் செய்யப்பட்டார். ஐபிஎஸ் அதிகாரி வி.ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக வி.ஜெயஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். டிஐஜி சாமுண்டீஸ்வரிக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமுண்டீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஜியாக பதவி உயர்த்தப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லஷ்மி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எஸ்.ராஜேந்திரன் ஆவடியில் தலைமையகம், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐஜியாக பதவி உயர்வு பெற்ற எம்.எஸ்.முத்துசாமி தமிழ்நாடு காவல் பயிற்சி கல்லூரியின் கூடுதல் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை ஆணையராக பாண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோன்று மொத்தம் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று 16 ஐபிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…